17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நகை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களை கைது..

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நகை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களை கைது..

எழுதியவர்: ஆசிரியர் June 5, 2019, 1:00 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனிமுருகன் கோயிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் வெளிமாநில பக்தர்களை குறிவைத்து வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கூட்ட நெரிசலில் பக்தர்களிடம் இருந்து நகைபறிக்கும் செயலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை கவனித்த போலீசார், இருபெண்களையும் கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 சவரன் தங்கநகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!