18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பலி..

மதுரை திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பலி..

எழுதியவர்: ஆசிரியர் June 5, 2019, 1:26 am

மதுரை திருமங்கலம் அருகே உள்ள நடுக்கோட்டையை சேர்ந்த பத்ரகாளி என்பவரின் மகன் சுந்தரபாண்டியன் (வயது27) திருமங்கலத்தில் உள்ள இவரின் தாத்தா நேற்று இறந்து விட்டார். தாத்தாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நடுவக்கோட்டையை சேர்ந்த மொக்கச்சாமி என்பவரின் மகன் முருகவேலுடன் (27) இருசக்கர வாகனத்தில் திருமங்கலத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.

திருமங்கலம் அருகில் உள்ள ஆறுகண் பாலம் வளைவில் திரும்பியபோது விருதுநகரில் இருந்து பெரியகுளம் சென்ற தனியார் பஸ் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில்  சுந்தரபாண்டியன், முருகவேல் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

திருமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் முத்துகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக..மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!