17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சமூக விரோதகளின் கூடாரமாக மாறிவரும் பழைய மின்சார அலுவலகம்…

மதுரையில் சமூக விரோதகளின் கூடாரமாக மாறிவரும் பழைய மின்சார அலுவலகம்…

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 10:35 pm

மதுரையின் முக்கிய வீதிகளில் ஒன்றான மேலபொன்னகரம் 7வது தெருவில் பழைய மின்சார அலுவலக கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இக்கட்டிடம் முற்றிலும் சிதைந்த நிலையில் போதை வஸ்துகளை பயன்படுத்த ஏதுவாக உள்ளதால் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் இந்த இடத்தில் தஞ்சம் புகுர்கின்றனர்.

மேலும் கட்டிடம் முழுமையாக சேதம் அடைந்த நிலையில் உள்ளே சென்று பார்வையிட்ட பொழுது தினமும் மது அருந்துவதற்கான கூடாரமாக செயல்படுவதை காண முடிந்தது. அதே இடத்தில நகராட்சி ஊழியர்களும் முறையற்ற வகையில் உபயோகமல்லாத தண்ணீர் கேன்களை குப்பையாக சேர்த்து மாடியில் வைத்துள்ளனர். முக்கிய குடியிருப்பு பகுதியில் இது போல் பயன்பாடற்ற கட்டிடடம் மக்களுக்கு பல்வேறு இடர்களை உண்டாக்குகிறது.

மேலும் அருகில் இருந்த நபரிடம் விசாரித்த போது மாலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை மது அருந்துபவர்கள் அதிக மாக பயன்படுத்துவதாக புகார் கூறினார். மின்சார வாரியம் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!