17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் படுகாயம்..

தேனி அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 7:06 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள E புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஆரிச்சாமி மகன் சபரி (24) , தேனி அல்லிநகரம் பகுதியைச் சார்ந்த உதயசூரியன் மகன் வசந்த் (24) ஆகியோர் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் அருகேயுள்ள அடுக்கம் பகுதிக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் குறத்தி வேசம் அருகே எதிர்பாராவிதமாக விபத்துக்குள்ளானது.

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் பட்டவர்கள் உடனடியாக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

A சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!