17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு மருத்துவமனையில் பழைய புறநோயாளி சீட்டு கேட்டு அலைய விடுவதாக நோயாளிகள் குற்றச்சாட்டு..

அரசு மருத்துவமனையில் பழைய புறநோயாளி சீட்டு கேட்டு அலைய விடுவதாக நோயாளிகள் குற்றச்சாட்டு..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 10:11 am
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பழைய ஓபி சீட்டு இருந்தால் தான்  சிகிச்சையளிக்க புதிய ஓபி சீட்டு வழங்கப்படும் என்றதால் ஆத்திரமடைந்த  நோயாளி வாக்குவாதம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை சேர்ந்த முனுசாமி மகன் ராஜா 30 வயது, இவர் உடல்நிலை சரியில்லாமல் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு வெள்ளி, சனி இரண்டு நாள் சளி காய்ச்சல் என்று சிகிச்சை பெற்றுள்ளார்.
உடம்பு சரியாகவில்லை என்று மீண்டும் இன்று (04/06/2019) காலை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு  வந்த ராஜாவிடம் பழைய ஓபி சீட்டு கேட்டுள்ளனர், அவர் பழைய சீட்டு இல்லை புதிய சீட்டு கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் பழைய சீட்டு இருந்தால்தான்  சிகிச்சைக்கு தொடர் சிகிச்சைக்கு சீட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.  இதை கேட்டை ஆத்திரமடைந்த ராஜா கோபத்தில் ஸ்டரட்சரை தள்ளியதில் மருத்துவமனை முன்னாடி இருந்த கண்ணாடி உடைந்துள்ளது.  அங்கு வரும் நோயாளிகள்,  மக்களை  அலைய விடுவது தேவையில்லாத எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று புலம்புகின்றனர்.  இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!