17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் மனித நேய பணி..

மதுரை இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் மனித நேய பணி..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 2:41 am

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த திருமதி லலிதா என்பவர் தனது மகன் சதிஸ் குமார் வயது18 மனநலம் குன்றிய நிலையில் இருப்பதாகவும்  தனது ஏழ்மையான சூழலும், உடல்நிலை பாதிப்பாலும் சதீஷ்குமாரை வீட்டில் வைத்து பராமரிக்க இயலவில்லை என்றும் அவரை காப்பகத்தில் சேர்த்து விடுமாறு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட கிளைக்கு கோரிக்கை வைத்தார்

அதனடிப்படையில்  துணை அவைத்தலைவர் திரு.ஜோசு மற்றும் செயலாளர் திரு.கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின்படி  செயற்குழு உறுப்பினர் திரு.ராஜ்குமார்  அவரை காப்பகத்தில் சேர்த்து விட முயற்சிகள் மேற்கொண்டார். அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்  திரு.பிரம்மநாயகம் உதவியுடன்  மதுரை திருவாதவூரில் உள்ள அரசு மனநல குன்றியோர்க்கான காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

செய்தி:-  வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!