18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 3 வருடம் கழித்து சிக்கினார்..

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 3 வருடம் கழித்து சிக்கினார்..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 2:36 am

தேனி மாவட்டத்தில்  கம்பம் தெற்கு காவல்நிலையத்தில் திருட்டு வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக கம்பத்தைச் சேர்ந்த சூர்யகாந்த் (28) என்பவர் மீது பிடிகட்டளை (Warrent) நிலுவையில் உள்ள நிலையில்  காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.சவடமுத்து  தலைமையில்  SSI திரு.கர்ணன், SSI திரு.விஜயகுமார், PC திரு.தங்கதுரை ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் சூரியகாந்தை பிடித்தனர்.

இதன் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் சவடமுத்து  பிரிவு 229 (A) IPCன் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் இவர் மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் 10 திருட்டு வழக்குகளும், ஒரு கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கும், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல் மதுரை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!