17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு..

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 2:29 am

மதுரை தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மனைவி அமுதா (வயது32), தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.  அவர் இரவு நேரத்தில்  தெற்குமாரட் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அச்சமயம் அமுதாவை பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள் திடீரென அமுதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இது சம்பந்தமாக தெற்குவாசல் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!