17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கிழக்கு நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக ஜகாத் வழங்கும் நிகழ்வு..

கீழக்கரை கிழக்கு நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக ஜகாத் வழங்கும் நிகழ்வு..

எழுதியவர்: ஆசிரியர் June 3, 2019, 6:23 pm

கீழக்கரை கிழக்குத்தெருவில் செயல்படும் கிழக்கு நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் சுமார் இருபது ஏழை குடும்பங்களை தேர்வு செய்து சுமார் மூன்று லட்சத்தி ஆறாயிரம் ரூபாய் ஜகாத் வழங்கும் நிகழ்வு இன்று (03/06/219) ஹைராத்துன் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிழங்குத்தெரு ஜமாஅத் தலைவர் சேகு அபுபக்கர் சாகிபு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஜமாஅத் துணைத்தலைவர் முகம்மது அஜுகர் செயலாளர் இப்னு மௌலான,பொருளாளர் ஆரிப், ஹைராத்துன் ஜலாலியா மேல் நிலைப்பள்ளி தாளாளர் சாதீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் பேசிய அறக்கட்டளை தலைவர் அகமது ஆரிபீன் கூறுகையில் இந்திய அறக்கட்டளை கடந்த 2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கும் ஜகாத் நிதி மூலம் ஏழை குடும்பங்களை கண்டறிந்து ஜகாத் நிதியை முறையாக வழங்குகின்றோம் என்றார்.

நிகழ்வில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி போராசிரியர் ஆசிஃப் சிறப்புரையாற்றினார். பின்னர் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!