18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் அருகே 10 பவுன் நகையுடன் இளம்பெண் மாயம்..

திருமங்கலம் அருகே 10 பவுன் நகையுடன் இளம்பெண் மாயம்..

எழுதியவர்: ஆசிரியர் June 3, 2019, 2:56 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி ரெங்கபாளையத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 19). இவர் ரெங்கபாளையத்தில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு வேலைக்காக சென்றவர் திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்க வில்லை.

டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் அழகர்சாமி புகார் செய்தார். புகாரில் வீட்டில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை பாண்டிச்செல்வி எடுத்துச் சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பணம், நகையுடன் இளம்பெண் மாயமானதால், கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இடையபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் பாண்டிச்செல்வியை அழைத்துச் சென்றதாக தெரிய வந்தது. விசாரணை செய்து 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக  மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!