17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி…

வேலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் June 3, 2019, 1:12 am

வேலூர் பகுதியில் தொடர்ந்து வெய்யில் மற்றும் அனல் காற்று வீசி வந்தது. நேற்று 108 டிகிரி வரை வெய்யில் பதிவானது. இந்நிலையில் இன்று (02/06/2019) மாலை திடீரென்று காற்றுடன் மழை கொட்ட துவங்சியது.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளி கொண்டா, காட்பாடி, ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. தெருக்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் மாவட்ட மக்கள்  மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!