18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீரசிகாமணி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் மகத்தான விழா..

வீரசிகாமணி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் மகத்தான விழா..

எழுதியவர்: ஆசிரியர் June 2, 2019, 8:55 pm

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் தளிர் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா 01.06.19 அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்,வனத்துறை அதிகாரிகள்,வீரசிகாமணி ஊராட்சி செயலர் திரு.லட்சுமணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.உ.அரசன், முன்னாள் மாணவர்கள்,ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் சங்கரன் கோவில் பகுதி களப்பணியாளரும், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியுமான கனகராஜ் மற்றும் சிறப்பு குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விழாவின் போது வீரசிகாமணி ஊராட்சி செயலர் திரு.லட்சுமணன், மற்றும் மாற்றுத்திறனாளி பிரதிநிதி திரு.கனகராஜ், ஆகியோர் மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். அதை தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் தளிர் பசுமை இயக்கத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து பள்ளியை பசுமையாக்கும் மகத்தான மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர் .

இந்நிகழ்வினை தளிர் அமைப்பின் சார்பில் திரு.ரவிக்குமார், திருமதி. சங்கரி, உமா, காசிப் பாண்டியன், காளிப் பாண்டியன், காசி உமாமகேஸ்வரி, விஜயகுமார், சங்கர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.உ.அரசன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!