18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மணல் அள்ளுவதை தடுத்தவர் கொலை… கொலை கும்பலை கைது செய்ய கோரி சாலை மறியல்..

மணல் அள்ளுவதை தடுத்தவர் கொலை… கொலை கும்பலை கைது செய்ய கோரி சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் June 2, 2019, 8:50 pm

இராமநாதபுரம் அருகே இளமனூர் பகுதியில் மணல் அள்ளுவதை தடுக்கச் சென்ற பெரியசாமி மகன் மோகன் (47) என்பவரை 6 பேர் கும்பல் கொடூரமாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன் உயிரிழந்தார். இதனையடுத்து மோகன் உடலை கேணிக்கரை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அனுப்பினர்.

இந்நிலையில் கொலை கும்பலை உடனே கைது செய்யக் கோரி மோகனின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!