17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையில் போலீசார் எச்சரிக்கையை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள்..

சென்னையில் போலீசார் எச்சரிக்கையை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் June 2, 2019, 12:26 pm

சென்னையில் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள போதும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடப் போவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனால், வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர சோதனையை மேற்கொண்டனர். இருப்பினும், ஏராளமான இளைஞர்கள் நள்ளிரவில் மெரினா கடற்கரை சாலையில் குவிந்து பைக் ரேஸில் ஈடுபட முயன்றனர்.

காவல்துறையினரின் சோதனையும் மீறி சில இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் ரேஸ், பைக் வீலிங் செய்வது போன்ற செயலில் ஈடுபட்டதால் நள்ளிரவில் மெரினா கடற்கரை சாலை பரபரப்பாக காணப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!