17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஏழை,எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் 8 லட்சம் மதிப்பில் கிளை நூலகம் – அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்..

மதுரையில் ஏழை,எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் 8 லட்சம் மதிப்பில் கிளை நூலகம் – அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 10:05 pm
மதுரை தல்லாகுளத்தில் ஏழை,எளிய மாணவர்கள் அரசு தேர்வுகளுக்கு பயன் பெறும் வகையில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற நிதியின் கீழ் 8 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலக திறப்பு விழா நடைபெற்றது. இந்நூலகத்தை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராஜன் செல்லப்பா கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, ஏழை எளிய மாணவர்கள் உட்பட அனைவரும் டெட், நீட் உள்ளிட்ட அரசு தேர்வுகளுக்கு படித்து பயன்பெறும் வகையில் அனைத்து விதமான  புத்தகங்களும் அமைந்துள்ள வகையில் நூலகம் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது, மாணவர்கள் அனைவரும் நூலகத்தை  பயன்படுத்தி திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!