18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருமேனி ஜமாத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. அமைச்சர் பங்கேற்பு..

இருமேனி ஜமாத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. அமைச்சர் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 10:01 pm

இராமநாதபுரம் மாவட்டம் இருமேனி ஜாமிஆ மஜ்லிஸ் சார்பில் ரம்ஜான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டபம் ஒன்றிய அதிமுக செயலாளர் எம்கேகே. தங்கமரைக்காயர் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், இருமேனி ஜமாத் தலைவர் சீனி இபுராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் கலந்து கொண்டார்.

இருமேனி ஜமாத் துணை தலைவர் மீரான் முகைதீன்,செயலாளர் சுல்தான் அலாவுதீன், உதவி செயலாளர் ஹாரூன் அபுபக்கர், பொருளாளர் அகமது சிராஜ்தீன், கிளை செயலர் சீனி இபுராஹீம், கடலாடி ஒன்றிய அதிமுக துணை செயலாளர் சண்முகபாண்டியன், மாவட்ட பிரதிநிதி முத்துப் பாண்டி, மண்டபம் அதிமுக நகர் செயலாளர் சீமான் மரைக்காயர், ராமநாதபுரம் இளைஞர் பாசறை மாவட்ட இணை செயலாளர் குமார், ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் பாசறை செயலர் பாலசுப்ரமணியன்,  மேலமைப்பு பிரதிநிதிகள் நாகூர் கனி, அயூப் கான், அதிமுக கிளை செயலாளர்கள் நஜிமுதீன் (இருமேனி) ஜானகி ராமன் (பெருங்குளம்) தெய்வேந்தின் (அகஸ்தியர் கூட்டம்), ராஜேந்திரன் (என் மனம்கொண்டான்), ராம்கோ செயலாளர் மங்களநாத சேதுபதி, ஜெ., பேரவை முருகானந்தம், வழக்கறிஞர் செல்வக்குமார், ராமநாதபுரம் ஒன்றிய மாணவரணி செயலாளர் காளிதாஸ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் சந்திரன், மண்டபம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் சாத்தையா, மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் முகமது யூசுப், சீனி காதர் முகைதீன், ராமநாதபுரம் நகர் 19 வது வார்டு செயலாளர் ஆதில் அமீன், மண்டபம் ஒன்றிய ஜெ., பேரவை செயலர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!