18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூரில் பைனான்சியர் வெட்டிக்கொலை…

அலங்காநல்லூரில் பைனான்சியர் வெட்டிக்கொலை…

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 6:20 pm

மதுரை அருகில் உள்ள அலங்காநல்லூர் நடராஜ் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54) பைனான்சியர் தொழில் செய்து வந்தார். மதியம் 2 மணியளவில் இளங்கோவன், வீட்டு முன்பு அமர்ந்திருந்த பொழுது  3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர்  அரிவாள், கத்தி, போன்ற ஆயுதங்களுடன் ந இளங்கோவனை கொடூரமாக தாக்கியுள்ளறர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக மரணமடைந்தார். அலங்காநல்லூர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!