17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில்பட்டியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்..

கோவில்பட்டியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 4:13 pm

கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளத்தில் பாரதி ஹாக்கி கிளப் சார்பில் மாநில அளவிலான 3 நாள் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி, வேலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் நாள் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கோவில்பட்டி பாரதி நகர் ஹாக்கி அணியும், பாண்டவர்மங்கலம் ஹாக்கி அணியும் மோதின. இந்த போட்டியில் பாரதி நகர் ஹாக்கி அணி 1 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் அருப்புக்கோட்டை, மூப்பன்பட்டி ஹாக்கி அணிகள் மோதின. இதில் 9 – 0 என்ற கோல் கணக்கில் அருப்புக்கோட்டை ஹாக்கி அணி வெற்றி பெற்றது. 3வது போட்டியில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி ஹாக்கி கிளப் மற்றும் சிவகங்கை ஹாக்கி அணியும் மோதின.

இந்த போட்டியில் 6 – 2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி ஹாக்கி கிளப் அணி வெற்றி பெற்றது. 4வதாக நடைபெற்ற போட்டியில் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம், ராஜபாளையம் ஹாக்கி அணிகள் மோதின. இதில் 3 – 1 என்ற கோல் கணக்கில் சுப்பிரமணியபுரம் அணி வெற்றி பெற்றது. 5வது போட்டியில் கோவில்பட்டி இலுப்பையூரணி ஹாக்கி அணியும், திருச்சி ஹாக்கி அணியும் மோதின. இதில் 2 – 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி இலுப்பையூரணி ஹாக்கி அணி வெற்றி பெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!