17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 3:46 pm

மதுரை செல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சோமு ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மதுரை செல்லூர், கட்டபொம்மன் நகர் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரிடம் விசாரணை செய்த போது மதுரை பூந்தமல்லி நகரை சேர்ந்த இசக்கி பாண்டியன் மகன் கணேசன் என்ற பாடைகம்பு கணேசன் என தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!