17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் கேபிள் வயர்கள்…

மதுரையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் கேபிள் வயர்கள்…

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 3:34 pm

மதுரை நகர் முழுவதும் அனைத்து மின் கம்பங்களில் மற்றும் மின்மாற்றியில் கேபிள் வயர்கள் இஷ்டத்திற்கு சுற்றப்பட்டுள்ளது இதனால் மின்சாரம் கேபிள் வயர் மூலமாக செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் டிவிகளுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. கேபிள் வயர் மூலமாக மின்சாரம் பாய்ந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது என துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்  சாலைகளில் வயர்கள் அறுந்து சாலையில்  அபாயகரமாக கிடக்கிறது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் மற்றும் உயிர்பலி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். கடந்த வாரம் சென்னையில் கேபிள் வயர் கழுத்தில் இறுக்கி  பலியானார்.  மதுரையிலும் இதே போன்று சம்பவம் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!