17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் பஸ் நிலையத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தை சார்ந்த பெண் சிக்கினார்…

ஆம்பூர் பஸ் நிலையத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தை சார்ந்த பெண் சிக்கினார்…

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 1:07 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த நவநீதம் (75) என்ற ஓய்வு பெற்ற ஆசிரியை ஆம்பூரில் ஓரு நிகழ்ச்சியில் பங்குபெற்று விட்டு பஸ் நிலையத்தில் பஸ் ஏறும் போது கூட்டத்தை பயன்படுத்தி பெண் ஒருவர் அவரின் கழுத்திலிருந்து 4 சவரன் நகையை அறுத்து கொண்டு ஓடினார். நவநீதம் கூச்சலிட பொதுமக்கள் பிடித்து அந்த பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த பெண் நகை திருடும் கும்பலை சேர்ந்த சேலம் மாவட்டம் அயோத்திய பட்டினத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவனின் மனைவி என்றும் இவர்கள் குழுவாக ஊர் ஊராக சென்று நகைகளை திருடி வந்து உள்ளனர், மீனா (33) வை கைது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மீனாவுடன் வந்த 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!