17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் கோஷ்டிப் பூசல் ..3 பேர் கைது….

நிலக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் கோஷ்டிப் பூசல் ..3 பேர் கைது….

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 12:53 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எஸ்.மேட்டுப்பட்டி யைச் சேர்ந்த நாகராஜின் மனைவி தவமணி வயது 26.தவமணி தற்போது கோயம்புத்தூரில் ஒரு தனியார் மில்லில் கூலி வேலை செய்து குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

இந்நிலையில் எஸ். மேட்டுப்பட்டியில் கோவில் திருவிழாவிற்காக தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது எஸ்..மேட்டுப்பட்டி யைச் சேர்ந்த கணேசன் மனைவி நாகராணி (வயது 45). இவர்களின் உறவினர்கள் முன் விரோதத்தை மனதில் வைத்து ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டார்கள். இதில் பலத்த காயமடைந்த தவமணி, நாகராணி ஆகிய 2 பேர்களும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தவமணி மற்றும் நாகராணி நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இரண்டு பேரும் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் இடம் தவமணி கொடுத்த புகாரின்படி ராமகிருஷ்ணன் வயது 25, நவீன் குமார் வயது 22, கணேசன் வயசு 48, மற்றும் ராஜ்குமார் ராமராஜ் ,மதுரை வீரன், ராமமூர்த்தி, கனல் கண்ணன் ஆகிய எட்டு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் அதில் ராமகிருஷ்ணன் ,நவீன் குமார், கணேசன் ஆகிய 3 பேர்களை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். அதே போன்று நாகராணி கொடுத்த புகாரின் படி பாண்டி, பிச்சை பாண்டி மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!