18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் இ- சேவை மையம், ஆதார் மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்..

திண்டுக்கல்லில் இ- சேவை மையம், ஆதார் மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்..

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2019, 7:21 pm

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையம் ஊழியர்கள் , 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இ-சேவை மையங்களை மூடக்கூடாது, சட்டவிரோதமாக பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும், அடிப்படை உரிமைகளை செய்து கொடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 11 சேவை மையங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணிகள் முற்றிலும் பாதிப்பு. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!