17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.. அனுமதியில்லாத குடிநீர் மின் மோட்டர் பறிமுதல்.. வேகத்தடைகள் நீக்கம்..

கீழக்கரை நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.. அனுமதியில்லாத குடிநீர் மின் மோட்டர் பறிமுதல்.. வேகத்தடைகள் நீக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2019, 3:26 pm

கீழக்கரை நகராட்சி  மேலாளர் (பொறுப்பு ஆணையர்) தலைமையில் பல் வேறு பகுதிகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது 10கும் மேற்பட்ட வீடுகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார் வைத்து நகராட்சி குடிநீர் எடுத்த மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதத்துடன் வீட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

அதே போல் கீழக்கரையில் பல் வேறு பகுதிகளில் முன் அனுமதியில்லாமல் இடையூராக இருந்த வேகத்தடைகளும் நீக்கப்பட்டது.

மேலும் பல இடங்களில் அனுமதியில்லாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது சம்பமந்தமாக வந்த புகார்களை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!