17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர்…

உசிலம்பட்டி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர்…

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2019, 1:46 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விங்க நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அய்யாவு(எ) குருநாத தேவர் (85). இவரது மனைவியுடன் எற்பட்ட தகராறு காரணமாக மனைவி அம்ச மணியை பிரிந்து கடந்த 40 வருடமாக அய்யாவு தனது தோட்ட வீட்டில் வசித்து வந்தார். வழக்கம் போல் தனது தோட்ட வேலைகளை முடித்துவிட்டு தூங்கி கொண்டிருந்த நிலையில் காலையில் பார்த்த போது தலையின் முன்பகுதி வெட்டப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாவுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து யாராவது கொலை செய்தார்களா என விசாரணை நடத்துகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!