18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கண்மாயில் மணல் திருட்டு. ..அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கண்மாயில் மணல் திருட்டு. ..அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2019, 1:31 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராம பகுதியில் உள்ள கண்மாய்களில் வண்டல் மண்கள் அதிகம் உள்ளது. இதையறிந்த மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பட்ட பகலிலேயே சட்டத்திற்கு விரோதமாக ஜேசிபி மூலம் வண்டல் மண் களை திருடிச் சென்று செங்கல் சூலைகளுக்கு விற்பனைசெய்து வருகின்றனர். வண்டல் மண் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பள்ளம் தோண்டி கண்மாய்களின் வளத்தை பாதிக்கும் வகையில் வண்டல் மண்களை திருடுகின்றனர்.

இதனால் நிலம் வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெருவிக்கின்றனர். இது போன்று சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மணல் கடத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், மணல் கடத்தலை தடுக்க கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்று உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் மணல் கடத்தல் கும்பல் சேர்ந்தவர்கள் அதிகாரிகள் மெத்தனபோக்கினால் அமோகமாக மணலை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!