17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கட்டத்தேவன்பட்டியில் குடிநீருக்காக விடிய விடிய காத்திக்கும் பெண்கள்…

உசிலம்பட்டி அருகே கட்டத்தேவன்பட்டியில் குடிநீருக்காக விடிய விடிய காத்திக்கும் பெண்கள்…

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2019, 11:57 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊரட்சிக்கு உட்பட்ட பகுதியான கட்டத் தேவன்பட்டியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.கிராமத்தின் குடிநீர் வசதிக்காக ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவதற்காக குழாய் அமைக்கப்பட்டது. இக்குழாய் பழுதடைந்துள்ளதால் கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் வருவதிவில்லை.

மேலும் இந்த கிராமத்தில் உப்புத் தண்ணீரும் கிடையாது. இது குறித்து செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகளோ இதுவரை குடிநீருக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதிகளில் இருக்கும் பெண்கள் குடிநீருக்காக குடத்தை குழாய்க்கு எடுத்து வந்து இரவு நேரம் என்று பாராமலும் விடிய விடிய காத்திருந்து குடிநீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி செல்கின்றனர். எப்போதாவது சில நேரங்களில் வரும் குடிநீரின் அளவு சுமார் 2 அல்லது 3 குடம் தான் குடிநீர் வருவதாக கிராம மக்களும் பெண்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டத் தேவன்பட்டி கிராமத்திற்கு போதிய குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்களும் பெண்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!