அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் தலைமை வகித்தார். பவுண்டேஷன் செயலர் ஜெயினுலாபுதீன் வரவேற்றார். அப்துல் கலாம் பன்னாட்டு பவுண்டேஷன் புதிய அலுவலகத்தை சிபிஐ இயக்குநர் (ஓய்வு) கார்த்திகேயன் திறந்து வைத்து பேசினார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேனேஜிங் டிரஸ்டிகள் நஜிமா மரைக்காயர், நாகூர் ரோஜா, ஷேக் தாவூது ஆகியோர் பேசினர். இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிச்சந்திர ராம வன்னி, வழக்கறிஞர் சோமசுந்தரம், உள்பட பலர் பங்கேற்றனர். பவுண்டேஷன் மேனேஜிங் டிரஸ்டி ஷேக் சலீம் நன்றி கூறினார்.













You must be logged in to post a comment.