18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அப்துல் கலாம் பன்னாட்டு பவுண்டேஷன் அலுவலகம் ராமேஸ்வரத்தில் திறப்பு…

அப்துல் கலாம் பன்னாட்டு பவுண்டேஷன் அலுவலகம் ராமேஸ்வரத்தில் திறப்பு…

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2019, 3:22 pm

அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் தலைமை வகித்தார். பவுண்டேஷன் செயலர் ஜெயினுலாபுதீன் வரவேற்றார். அப்துல் கலாம் பன்னாட்டு பவுண்டேஷன் புதிய அலுவலகத்தை சிபிஐ இயக்குநர் (ஓய்வு) கார்த்திகேயன் திறந்து வைத்து பேசினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேனேஜிங் டிரஸ்டிகள் நஜிமா மரைக்காயர், நாகூர் ரோஜா, ஷேக் தாவூது ஆகியோர் பேசினர். இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிச்சந்திர ராம வன்னி, வழக்கறிஞர் சோமசுந்தரம், உள்பட பலர் பங்கேற்றனர். பவுண்டேஷன் மேனேஜிங் டிரஸ்டி ஷேக் சலீம் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!