கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா கோவில்பட்டி லாயல் மில் காலணியில் வைத்து நடைபெற்றது.
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கோவில்பட்டி நகரை பசுமையாக்கவும் “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” திட்டம் செயல்படுத்தப்பட்டு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி கோவில்பட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபெற்று வருகிறது. லாயல் மில் காலணியில் நடந்த மரக்கன்று நடும் விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். இரயில்வே இருவழிப்பாதை திட்ட மேலாளர் மாரியப்பன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ரவிமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் திட்டத்தின்கீழ் மரக்கன்று நடும் பணியினை ரோட்டரி மாவட்ட திட்டத்தலைவர் விநாயகாரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.விழாவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், வீராச்சாமி, நாராயணசாமி, பிரபாகரன், விக்னேஷ், குணசேகரன், பத்மநாபன், ஜீவஅனுகிரக பசுமை இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துமுருகன் நன்றி கூறினார்.




You must be logged in to post a comment.