17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி. – அமைச்சர் கடம்பூர் ராஜூ..

திமுக பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி. – அமைச்சர் கடம்பூர் ராஜூ..

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2019, 3:00 pm

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  ESI  மருந்தக மைதானத்தில் தமிழக அரசின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சி கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி அரசு பொருட்காட்சிக்கு   செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ   வருகை தந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, குடும்ப நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அரங்குகளை பார்வையிட்டார் .  

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுகவில் 37 எம்பிக்கள் இருந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. எப்படி அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்களோ அதே போல் மக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம். அதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் சாதிக்க முடியாது. திமுக பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி என்று கூறினார். 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!