18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின் மோட்டார் மூலம் குடி நீர் திருட்டை தடுக்க ஆய்வு…

மின் மோட்டார் மூலம் குடி நீர் திருட்டை தடுக்க ஆய்வு…

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2019, 12:40 pm

மதுரை மாநகராட்சி 76 வது வார்டு பசும்பொன் நகர் மற்றும் நீலகண்டன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி மின்மோட்டார் மூலமாக சிலர் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

இதனால் பல பகுதிகளுக்கு நீர் செல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.  இதனைத்தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சியினர்  அதிரடி நடவடிக்கையில் இறங்கி மின் மோட்டார் மூலம் குடி நீர் எடுப்பவர்கள் மீது அபராதம் விதித்து, மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் 76 ஆவது வார்டு ஆய்வாளர்  முத்துராமலிங்கம்  தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!