விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மதுரை சிவன் சாலையில் இன்று (29/05/2019) அதிகாலை HDFC வங்கி ஏடிஎம்இல் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இச்சம்பவம் அறிந்து உடனடியாக சம்பவ விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் இவ்விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமான மேல் நடவடிக்கை வங்கி அதிகாரிகள் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.