திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆட்சி நகரில் குடியிருக்கும் போஸ் வயது 62. இவர் முன்னாள் நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவர். இவருக்கும் நிலக்கோட்டையை சேர்ந்த பாலு மகன் சின்ன ராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக இடப்பிரச்சனை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து அது போஸுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அந்த இடத்தில் கடைகள் அமைப்பதற்காக வேலை செய்தபோது அங்கே வந்த சின்ன ராஜ் 40,, சின்னராஜ் மகன் அஜித், சின்னராஜ் மனைவி மகேஸ்வரி மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு பைப், மரக்கட்டையை கொண்டு தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். இதன் பின்னர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் இடம் கொடுத்த புகாரின் படி சின்னராஜ் , மகேஸ்வரி அஜித் ஆகிய 3 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் சின்னராஜ் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். மகேஸ்வரி ,அஜித் ஆகிய 2 பேர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.




You must be logged in to post a comment.