17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் வன அலுவலகம் முற்றுகை..

மண்டபம் வன அலுவலகம் முற்றுகை..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 7:52 pm

புள்ளி தீவு பகுதியில் குடும்பங்களுடன் மீன்பிடிக்க சென்றவர்களிடம் மண்டபம் வன உயிரின வனச்சரக அலுவலர்கள் அத்து மீறி நடந்து கொண்டனர். பாம்பன் தோப்புக்காடு மீனவர் மணிகண்டனை அடித்து இழுத்து சென்ற கொடுமை செய்தனர். மண்டபம் வன உயிரின வனச்சரக அலுவலகத்தில் மீனவர் மணிகண்டன் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கோரியும், மீனவர் மணிகண்டனை விடுவிக்கக் கோரியும் கடல் தொழிலாளர் சங்கம் மற்றும் தோப்புக்காடு கிராம மீனவர்கள் மண்டபம் வனச்சரக அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!