மதுரை டவுன்ஹால்ரோடு சாக்ஸ் நிறுவனம்,காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம்,ஜெ.சி.ஐ மதுரை சென்ட்ரல் மற்றும் அபிநயா ஆப்டிக்கல்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் கண்பரிசோதனை முகாம் மதுரை டவுண்ஹால் ரோட்டில் உள்ள சாக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் நடைபெற்றது.
இம்முகாமில் ஜெ.சி.ஐ மதுரை சென்ட்ரல் நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள்,சாக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள்,மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரத்த தானம் அளித்தனர். சாக்ஸ் ஷோரூம் உரிமையாளர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.
இதில் ஜெ.சி.ஐ மதுரை சென்ட்ரல் தலைவர் சுடலைமுத்து, செயலாளர் முத்துகணேசன், துணைத்தலைவர் சுகுமார் அபிநயா ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் மனோஜ்குமார் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸுக்காக:- மதுரை நிருபர் கனகராஜ்




You must be logged in to post a comment.