17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வெளுத்து வாங்கிய கோடை மழை..

வேலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வெளுத்து வாங்கிய கோடை மழை..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 7:38 pm

வேலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெய்யில் வாட்டியது. நேற்று கூட 112. 2 டிகிரி வெய்யில் அடித்தது. இந்த நிலையில் இன்று செவ்வாய் 28-ம் தேதி காலையில் கடும் வெய்யில் வாட்டிய நிலையில் மாலை காற்றுடன் மழை கொட்டியது. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி மேல் மொணவூர், ராணிப்பேட்டை, வாலாஜா, பேர்ணாம்பட்டு மற்றும் சுற்றுப்புறங்களில் மண் குளிர்ந்தது. வேலூர் அடுத்த மேல் மொணவூரில் ஆலங்கட்டி மழை பெய்தது.

அதே போல் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஆந்திர மாநிலத்தை ஒட்டி மலைப் பகுதியில் உள்ளது. இங்கு மழை பெய்தால் காற்றாறுகளில் வெள்ளம் ஓடும். இன்று 28-ம் தேதி மாலை வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு மற்றும் சுற்றுப்புறபகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சிறிய காற்றாறுகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. மக்கள் மழையின் குளிர்ச்சியில் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

கே.எம்.வாரியார் கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!