18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை பலி..

கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 4:33 pm

கடையநல்லூர் அருகே காட்டுப்பகுதியில் சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேலகடையநல்லூர் அருகே உள்ள முந்தல்காடு அங்கே உள்ள சுப்பையா என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு ஒன்று உள்ளது.

இந்த மாந்தோப்புக்குள் இரவு ஒரு வயதுடைய குட்டியானை ஒன்று புகுந்தது.அப்போது சோலார் மின்சாரம் தாக்கி குட்டி யானை இறந்தது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அங்கு புகுந்த காட்டு யானை மா மரங்களில் உள்ள மாங்காய்களை பிடுங்கி தின்று விட்டு வாய்காலில் சென்ற தண்ணீரை குடிக்க சென்றபோது அந்த வழியாக சென்ற சோலார் கம்பியின் மின்சாரம் குட்டியானையின் மீது பாய்ந்தது.

இதில் சோலார் மின்சாரம் தாக்கி காட்டு குட்டியானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் திருமால் கடையநல்லூர் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் சரவணன், மேக்கரை வனவர் அருமைக்கொடி ஆகியோர் தலைமையில் வன காவலர்கள் சசிக்குமார், ஆறுமுகம், ராமச்சந்திரன், பால்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சோலார் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!