18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானல் மேல்மலை செல்லும் சாலை வனப்பகுதியில் தீ விபத்து..

கொடைக்கானல் மேல்மலை செல்லும் சாலை வனப்பகுதியில் தீ விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 1:26 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலைக்கு செல்லும் சாலையில் பூம்பாறை என்ற கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் மரங்கள் கருகியதுடன், மின்கம்பங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு, இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும் என்று, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!