17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » இஸ்லாம் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரையில் நபித் தோழர் அபூபக்கர் (ரழி)பற்றிய சிறப்பு நிகழ்ச்சி – நடுத் தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது

கீழக்கரையில் நபித் தோழர் அபூபக்கர் (ரழி)பற்றிய சிறப்பு நிகழ்ச்சி – நடுத் தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது

எழுதியவர்: ஆசிரியர் March 22, 2017, 5:45 pm

கீழக்கரையில் 21/3/2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கீழக்கரை, நடுத்தெரு, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” ஜும்ஆ மஸ்ஜிதில் முஸ்லிம் சமுதாயத்தின் முதல் கலீஃபா அமீருல் முஃமினீன் அபூபக்ர் அஸ்-ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி கீழக்கரை டவுன் காஜியும் A.M.M. காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீகி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக அல் மத்ரஸத்துல் ஜாமிஆ மாணவர் பஷீர் கிராஅத் ஓதினார். மாணவர் முஷ்ரப் தமிழாக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் உதவி செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி வரவேற்பரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சென்ட்ரல் பள்ளியின் இமாம் மவ்லவி முஹம்மது யாஸீன் யூசுபி ஃபாஜில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக மவ்லவி ஹாஃபிள் K.செய்யிது அஹ்மது நெய்னா நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஏராளமான ஜமாஅத்தார்கள் திரளாக கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!