17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாரப்பட்டி அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இணைப்பு இல்லாததால் கடந்த இரண்டு வருடமாக குடிநீர் பஞ்சம்..

பாப்பாரப்பட்டி அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இணைப்பு இல்லாததால் கடந்த இரண்டு வருடமாக குடிநீர் பஞ்சம்..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 3:06 am

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்து ஆச்சர் அல்லி ஊராட்சி எட்டியாம்பட்டி அண்ணாமலை கொட்டாய் கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரைக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு இல்லை அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. அதிலிருந்து வரும் குடிநீரை பயன்படுத்தி வந்துள்ளனர் மழை இல்லாத காரணத்தால் குடிநீர் நின்றுவிட்டது.

இந்த கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் நினைப்பையும் அரசாங்கம் செயல்படுத்தவில்லை. இது சம்பந்தமாக பெண்ணாகரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராமத்தில் குற்றம்சாட்டியுள்ளார். ஜூன் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்குவதால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். பகுதி மக்கள் குடிநீருக்காக இரண்டு வருடமாக பழைய பாப்பாரப்பட்டிக்கு தினந்தோறும் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று இருசக்கர வாகனத்தில் குடி தண்ணீர் எடுத்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் இப்பள்ளிக்கு சரியான நேரத்திற்கு போக முடியாத சூழ்நிலையும்  ஏற்படும் என்கின்றனர் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இணைப்பு எட்டியாம்பட்டி அண்ணாமலை கொட்டாய்  கிராமத்திற்க்கு நினைக்கவில்லை என்றாள் சாலைமறியல்  செய்யப் போவதாக கிராம மக்களும் கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!