18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் குடிநீர் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்..

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் குடிநீர் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 12:58 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இன்று காலை (27-ம் தேதி) அவரது சம்மந்தி ஊர் அருகில் அதாவது காட்பாடி அடுத்த சேர்க்காடு சாந்தி நகரில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரியாக மக்களுக்கு வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சென்னை – பெங்களூரு சாலையில் மறியல் செய்தனர்.

இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!