17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியில் கடந்த 3 வருடங்களாக இடிந்து கிடக்கும் மயான சுற்றுச்சுவர்..

உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியில் கடந்த 3 வருடங்களாக இடிந்து கிடக்கும் மயான சுற்றுச்சுவர்..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 12:54 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அன்னம்பாரிபட்டியில் புதியதாக மயான வசதி செய்து தரும்படி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நகராட்சி நிதியிலிருந்து மயானம் கட்டும் பணி நடைபெற்றது.கட்டும் போதே தரமற்ற கட்டுமான பொருட்களை வைத்து கட்டியதால் கட்டி முடித்த 1 வருடத்திலேயே அதன் சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டமானது.

இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் பதிலேதும் இல்லை. இதனால் இந்த மயானத்தின் சுற்றுச்சுவர் கடந்த 3 வருடங்களாலே இடிந்த நிலையிலேயே காணப்படுகிறது. இந்த மயானத்திற்கு உடல்களை அடக்கம் செய்ய வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து கிடக்கும் மயானத்தின் சுற்றுச்சுவரை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!