18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி – கோடை வெயிலை சமாளிக்க குல்பி ஐஸ்உடன் முளைப்பாரி எடுத்த பெண்கள்…

உசிலம்பட்டி – கோடை வெயிலை சமாளிக்க குல்பி ஐஸ்உடன் முளைப்பாரி எடுத்த பெண்கள்…

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 12:49 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் கொண்டாடும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான இன்று (27/05/2019) பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

உசிலம்பட்டி மேலப்புதூரிலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 2 கி.மீட்டர் தூரம் வரை முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர். தற்போது கோடைவெயில் வாட்டி வருவதால் பெண்கள் முளைப்பாரியை தூக்கிச்செல்ல சிரமப்பட்டனர்.இதனால் வழிநெடுகிலும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பாக்கெட்டுகள், குல்பி ஐஸ் விநியோகம் செய்யப்பட்டது. பெண்கள் கையில் குல்பி ஐஸ், மறுகையில் முளைப்பாரியுடன் சென்றது வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!