17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கலில் இருந்து வந்து ராமேஸ்வரத்தில் சிறுமியை தவறவிட்ட பெற்றோர்கள்..

திண்டுக்கலில் இருந்து வந்து ராமேஸ்வரத்தில் சிறுமியை தவறவிட்ட பெற்றோர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 12:44 pm

இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த போது தவறவிடப்பட்ட குழந்தை, ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனுஷ்கோடி கடற்கரையில் ஒரு சிறுமி தேம்பி தேம்பி அழுதவாறு ஆதரவின்றி நிற்பதை கண்ட போலீசார், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில் சிறுமி பெயர் தனுஸ்ரீ என்பதும், திண்டுக்கல்லில் இருந்து பெற்றோருடன் ராமேஸ்வரத்தை சுற்றிப்பார்க்க வந்த‌ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியுடன் அரிச்சல்முனை பகுதியில் நாலா புறமும் குழந்தையின் பெற்றோரை தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் ஒன்றரை மணி நேரத்திற்கு பின் குழந்தையின் உறவினர்கள் வந்துள்ளனர். குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்த போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!