17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஏரி வேலை (100 வேலை திட்டத்தில்) கேட்டு BDOஆபிஸ் முற்றுகை..

ஏரி வேலை (100 வேலை திட்டத்தில்) கேட்டு BDOஆபிஸ் முற்றுகை..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 5:07 am

-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கெண்டேயன அள்ளி ஊராட்சியில் உள்ள காளி கவுண்டனுர் கொட்டாய், பாறைக்கொட்டாய் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் கடந்த ஒரு வருடமாக ஏரி வேலை வழங்காமல் ஏமாற்றி வருவதாக பஞ்சாயத்து செயலாளர் மதிவாணன் மீது புகாரை தெரிவித்து பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அக்கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் முற்றுகையிட்டனர்

கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபாலிடம் பஞ்சாயத்து செயலாளர் மதிவாணன் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் மேல் சந்தாபுரம், கீழ் சந்தாபுரம், சந்தா கொட்டாய் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்குவதாகவும் எங்களுக்கு வேலை வழங்காமல் ஏமாற்றுவதாகவும் தெரிவித்தனர்

மேலும் கடந்த முறை வேலை வழங்கும் போது ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்று அனைவரிடமும் வாராவாரம் 20 ரூபாய் கேட்டதாகவும் அதனை கேட்டதால் பழிவாங்கும் விதமாக எங்களுக்கு வேலை வழங்காமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்

இதனையடுத்து பஞ்சாயத்து செயலாளர் மதிவானனை உடனடியாக வரவழைத்த வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் சுழற்சி முறையில் அனைத்து மக்களுக்கும் வேலை வழங்க வேண்டும் ஜெராக்ஸ் போன்ற காரணங்களை காட்டி பணம் வசூல் செய்யக் கூடாது என எச்சரித்து அனுப்பினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!