18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை இராசாசி மருத்துவமனை குழந்தைகள் வார்டு பகுதியில் சுகாதார கேடு…

மதுரை இராசாசி மருத்துவமனை குழந்தைகள் வார்டு பகுதியில் சுகாதார கேடு…

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 4:54 am

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு பகுதியில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம்  உள்ளது.  அதே இடத்தில் கழிவு நீர் தொட்டியும் உள்ளது.  இத்தொட்டியின் மூடி மீது  இரு சக்கர வாகனங்கள் ஏறி செல்வதால், அத்தொட்டி உடைந்து துர்நாற்றத்துடன், சுகாதார கேடு விளைவிக்கும் விதமாக இருக்கிறது. அதேபோல் உடைந்த மூடியினால் இரு சக்கர வாகனங்களும் விபத்துக்குள்ளாகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வண்ணம், சேதம் அடையாத வகையில் தரமான மூடிகளை வைத்து  கழிவுநீர் தொட்டியை மூட மருத்துவமனை அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும், இல்லையெனில் இரண்டு சக்கர வாகன நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அதே சமயம் குழந்தைகள் வார்டு இருக்கும் பகுதி என்பதால்  குழந்தைகளும் விழும் அபாயம் உள்ளது.  இதனால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நோயாளிகளும் மற்றும் நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!