18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மக்களுக்கு மின் வசதி..

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மக்களுக்கு மின் வசதி..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2019, 4:38 am

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் காரையாறு சின்னமயிலாறு காணியின குடியிருப்பில் உள்ள 48 வீடுகளுக்கு இதுவரை மின்வசதி வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், வன விலங்குகள் அயிகமாக உள்ள பகுதி என்பதாலும் மின்சாரம் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்த நிலையில் தற்போது மத்திய, மாநில அரசுகள் சின்னமயிலாறு காணியின குடியிருப்பு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின்சார வசதி செய்ய உத்தரவிட்டுள்ளது.

வனத்துறையின் நிதி உதவியுடன் அப்பகுதியில் உள்ள 48 வீடுகளுக்கும் நேற்று முன்தினம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி கிடைத்திருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!