17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாரப்பட்டி அருகே ஒகேனக்கல் குடிநீர் வராததால் சாலையில் படுத்து சாலை மறியல்..

பாப்பாரப்பட்டி அருகே ஒகேனக்கல் குடிநீர் வராததால் சாலையில் படுத்து சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2019, 10:22 pm
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வராததால் கிராம மக்கள் சாலையில் படுத்து மறியல் செய்தனர்.
வேலம்பட்டி கிராமத்தில் 2 உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது இதிலிருந்து வரும் குடிநீர் வேலம்பட்டி சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் அவர்களுக்கு சொந்தத் தேவைக்கு குடிநீரை ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இதனால் அந்த கிராம மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. ஒகேனக்கல் குடிநீர் சிலர் வீட்டின் முன்பு தொட்டிகட்டி ஒரு சிலர் அவர்கள் தேவையான அளவுக்கு பயன்படுத்திக் கொண்டு வந்தனர்.
இதைப் பற்றி பலமுறை ஊர் மக்கள் கேட்டதற்கு அவர் திமிராக பேசி உள்ளாராம் இதனால் போதிய குடிநீர் இல்லாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று வேலம்பட்டி பேருந்து நின்று செல்லும் இடத்தில் பெண்கள் ஆண்களும்300 பேர்  சாலையில் அமர்ந்து  மற்றும் ரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு பென்னாகரம் பிடிஒ தண்டபாணி விரைந்து வந்து கிராம மக்களுக்கு தண்ணி வரும்படி ஏற்பாடு செய்துள்ளார் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!