18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு நாளை முதல் (மே 27) மக்கள் குறை தீர் கூட்டம் தொடரும்..

தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு நாளை முதல் (மே 27) மக்கள் குறை தீர் கூட்டம் தொடரும்..

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2019, 7:30 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை(27/5/2019)  மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் தேர்தல்  நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அமலில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் நாளை (27.5.2019) காலை, மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!